மானாமதுரை பள்ளிகளுக்கு ஏற்பட்ட அவலநிலை.., அரசு பரிசீலனை செய்யுமா?? சமூக ஆர்வலர்கள் கேள்வி!!

0

மானாமதுரையில், உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்பது விளையாட்டு மாணவர்களின் 22 ஆண்டு கால கனவாக உள்ளது. இதனை அரசு பரிசீலனைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

உள்விளையாட்டு அரங்கம்:

தமிழகத்தில், பல விளையாட்டு போட்டிகளில் தற்போதைய இளைய சமுதாயம் ஏராளமான சாதனைகளை புரிந்து வருகின்றனர். அந்த வகையில் மானாமதுரை நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.

அந்த பள்ளி மாணவர்கள் கபடி, கோகோ, வாலிபால், இறகு பந்து, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு குழு விளையாட்டு போட்டிகளிலும், மேலும் தனித்திறன் போட்டிகளிலும் மாநில அளவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.இருப்பினும் மாணவர்கள் பயிற்சி எடுத்துக் கொள்வதற்கு பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லையாம்.

இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இருப்பினும் மாணவர்கள் விளையாட்டு திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காக, பக்கத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் திறந்த வெளி மைதானத்தில், பயிற்சி எடுத்து கொண்டு வருவதாக கூறுகின்றனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மானாமதுரையில் தற்போது வரை உள்விளையாட்டு அரங்கம் அமைப்பது குறித்து எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் உள்ளது. இந்நிலையில் இனிமேலாவது உள்விளையாட்டு அரங்கம் அமைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் முக்கிய கோரிக்கையை அரசுக்கு முன்வைத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here