2வது குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை.., ஆனால் அதுல ஒரு பிரச்சனை இருக்கு., மனம் திறந்த ரோபோ சங்கர்!!

0
2வது குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை.., ஆனால் அதுல ஒரு பிரச்சனை இருக்கு., மனம் திறந்த ரோபோ சங்கர்!!

கோலிவுட் திரையில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் கலக்கி வந்த இவர் வெள்ளி திரையிலும் ஏகப்பட்ட படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.இப்படி சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவர் திடீரென உடல் எடை குறைந்து ஒல்லியாக காட்சி அளித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவரின் எடை குறைவுக்கு இது தான் காரணம் என பல வதந்திகள் இணையத்தில் பரவி வந்தது. இதன் பிறகு தான் தனக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கப்பட்டதாகவும், அதனால் தான் ஒல்லியாக இருப்பதாவும் ரோபோ கூறியிருந்தார். இப்படி இருக்கையில் இவர் அவருடை மனைவி பிரியங்காவுடன் இணைந்து தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை., அரசுக்கு புதிய சிக்கல்??

அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வனிதா இவர்களிடம் சில கேள்விகளை முன் வைத்திருந்தார். அதற்கு பதிலளித்து வந்த இவர், தனக்கு 2 வது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாகவும், அதற்கு முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால், தான் இரவு நேரத்தில் ஷூட்டிங் செல்வதால் அதுக்கு வாய்ப்பில்லாமல் இருப்பதாக கூறியுள்ளார். இப்படி இவர் பேசியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here