‘ட்ரெண்டிங்கில் ரஜினி’ – கலைகட்ட தொடங்கிய பிறந்தநாள் கொண்டாட்டம்!!

0
rajnikanth

டிசம்பர் 12ம் நாளான இன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஆகும். இதையொட்டி இன்று காலை அவரது ரசிகர்கள் அவரது வீட்டின் அருகில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70ம் வயதில் அடிஎடுத்து வைத்துள்ளார். இதனால் ரஜினியின் ரசிகர்கள் தனது தலைவரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ரஜினிக்கு பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் கடந்த இரண்டு நாட்களாக தங்கள் வாழ்த்துக்களை இணைய தளத்தின் வாயிலாக தெரிவிக்கின்றனர். இதனால் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ட்ரெண்டாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Rajnikanth
Rajnikanth

ரஜினிகாந்த் தனது கடின உழைப்பால் தமிழ் திரையுலகில் மட்டுமில்லாது உலக சினிமாவையே மிரள வைத்தவர். உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜப்பானில் இவருக்கு என்று ரசிகர் மன்றமே உள்ளது. அந்த அளவிற்கு பிரபலமானவர். இவரது ரசிகர்கள் இவரை “தலைவா” என்று தான் அழைப்பார்கள். 20 வருடங்களாக இவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று இவரது ரசிகர்கள் காத்திருந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த்தின் 70வது பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து!!

ரசிகர்களின் காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த வருடம் அரசியலில் நுழைந்தார். இந்த மாதம் கடைசியில் தனது அரசியல் கட்சியை அறிமுகம் செய்து வைக்க உள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எனவே, இந்த வருடம் பிறந்தநாள் கொண்டாட்டம் கூடுதல் கலைகட்டியுள்ளது.

actor rajinikanth
actor rajinikanth

இதனால் #HappyBirthdayRajinikanth என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் முன்னிலையில் உள்ளது. ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி அவரது ரசிகர்கள் அவர் நீண்ட ஆயுளையும், நல்ல உடல்நலத்தையும் பெற வேண்டும் என்று கோ பூஜை, மற்றும் கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் பலவற்றை மேற்கொண்டு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here