ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தின் கதைக்களம் இதுதான்.. வெளியான மிரட்டல் அப்டேட்!!

0
ரஜினியின் 'தலைவர் 171' படத்தின் கதைக்களம் இதுதான்.. வெளியான மிரட்டல் அப்டேட்!!
தமிழ் திரை உலகத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது, இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் Pre ப்ரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 22 ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது இப்படத்தின் கதை குறித்து ஓர் முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதாவது கிரைம் திரில்லர் கதைக்களத்தில் தான் தலைவர் 171 படம் உருவாக உள்ளதாம். மேலும் அரசாங்கம் ஆண்டுக்கு 12 மணிநேர கால அவகாசத்தை அனுமதித்துள்ளது, இதில் கொலை உட்பட அனைத்து குற்றச் செயல்களும் சட்டப்பூர்வமாக மாறும். காவல்துறையை அழைக்க முடியாது. மருத்துவமனைகள் உதவியை நிறுத்துகின்றன என்பதே இப்படத்தின் கதை களம் என்று சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here