குழந்தைக்கு பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட நகுல் குடும்பம் – வைரலாகும் உச்சகட்ட போட்டோஷூட்!!

0

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் நகுல் தற்போது தனது மனைவி குழந்தைகளுடன் எடுத்த போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். அதுவும் இந்த போட்டோஷூட் சற்று முகம் சுளிக்கும் படியாக இருப்பதால் பலரும் திட்டி வருகின்றனர்.

நகுல்

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நகுல். அந்த படத்தில் இவர் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாக இருப்பார். மேலும் இவர் பிரபல நடிகையான தேவயானியின் சொந்த தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாய்ஸ் திரைப்படத்திற்கு பிறகு திரையுலகில் தலைகாட்டாத நகுல் நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். மேலும் காதலில் விழுந்தேன் திரைப்படம் மக்கள் மத்தியில் ஹிட் அடிக்கவே அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டானார்.

அதன் பிறகு அவருக்கு மார்க்கெட் குறையவே படவாய்ப்புகளும் இல்லாமல் போனது. இந்நிலையில் அவருக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு நடிப்பு திறமை மட்டுமல்ல, நன்றாக பாடும் திறமையும் இருந்தது.

அதனால் தான் இவர் சூப்பர் சிங்கர் நடுவராகவும் இருந்தார். பிபி ஜோடிகள் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அசத்தி கொண்டுள்ளார். அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் தற்போது ஒரு போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது நகுல் சட்டை அணியாமலும் அவரது மனைவி குழந்தைக்கு பால் கொடுப்பது போன்றும் போட்டோஷூட் செய்துள்ளார். அவரது மனைவி அரைகுறை உடையுடன் இருப்பது போன்றும் போட்டோஷூட் செய்துள்ளார். இதனை பார்த்த பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here