தயவு செஞ்சு இந்த நிலைக்கு வாங்க., அதான் உங்களுக்கு நிம்மதி – நடிகை மீனாவிடம் வலுக்கும் கோரிக்கை!!

0
நடிகை மீனாவின் கணவர் இப்படிப்பட்டவரா?? இந்த மனுஷனுக்கா இப்படி ஒரு நிலைமை??

கணவர் இறப்புக்கு முன் நடிகை மீனா வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள், மீண்டும் இப்படி ஒரு மீனாவை பார்க்க ஆவலாக இருக்கிறோம், தயவு செஞ்சு நடிக்க வாங்க என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் கருத்து:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான, மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்றால் கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அண்மையில் நடிகை மீனாவின் 13 ஆம் ஆண்டு திருமண நாள் விழா வந்தது.

இதைக் குறிப்பிட்ட நெட்டிசன்கள், கடந்த ஆண்டு இதே நாளில் கணவருடன் இருந்த நீங்கள், தற்போது தனி மரமாக நிற்கிறீர்கள் என பதிவிட்டு ஆறுதல் தெரிவித்தனர். இதே போல் நடிகை மீனாவும், தன் கணவர் போட்டோவை வெளியிட்டு  அவர் குறித்து உருக்கமாக  பதிவிட்டார்.

அந்த வகையில், கணவர் இறப்புக்கு முன் நடிகை மீனா வெளியிட்ட ஒரு வீடியோவை பார்த்த ரசிகர்கள், இந்த சிரிச்ச முகத்தோடு இருக்கும் மீனா எங்களுக்கு மீண்டும் வேண்டும், அதே மனநிலையுடன் திரும்ப நடிக்க வாருங்கள் என வேண்டுகோள் வைத்துள்ளனர். ரசிகர்களின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here