நடிகர் விஜய்யின் சொகுசு கார் விவகாரம் – அதிரடி தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்த சென்னை ஐகோர்ட்!

0
நடிகர் விஜய்யின் சொகுசு கார் விவகாரம் - அதிரடி தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்த சென்னை ஐகோர்ட்!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ஐகோர்ட் தீர்ப்பு:

நடிகர் விஜய்க்கு பெரும்பாலும் காரின் மீது மோகம் அதிகம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.அதன் அடிப்படையில் நடிகர் விஜய் அமெரிக்காவிலிருந்து கிட்டத்தட்ட ரூ.63 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை 2005ம் ஆண்டு இறக்குமதி செய்தார். தமிழக அரசின் வணிக வரித்துறை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.இதற்கு மறுப்பு தெரிவித்த தளபதி விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை தொடர்ந்து நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், விஜய் சார்பில் ரூ.7,98,075 நுழைவு வரி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரி கட்டாமல் இருந்த இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக ரூ.30,23,609 செலுத்த வேண்டும் என்று நடிகர் விஜய்க்கு மீண்டும் தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார்.

நடிகர் விஜய்யின் தரப்பு வழக்கறிஞர், கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து, மாதத்திற்கு 2 சதவீதம் அபராதம் வசூலிக்க வேண்டும் ஆனால் தற்போது தனது தரப்பினருக்கு 400 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இது குறித்து இன்று நடந்த வழக்கில் நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது எனவும் செலுத்தாமல் இருந்தால் அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி சுரேஷ் குமார் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here