பிரபல நடிகர் மனோ பாலா காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகினர்!!

0
பிரபல நடிகர் மனோ பாலா காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகினர்!!
பிரபல நடிகர் மனோ பாலா காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகினர்!!

பிரபல இயக்குனரும், நடிகருமான மனோபாலா லியோ படத்தில் நடித்து வந்த நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மனோ பாலா:

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டு விளங்கியவர் தான் நடிகர் மனோபாலா. ஆரம்பத்தில் இயக்குனராக அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்து, அதன் பின்னர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதையடுத்து பல முன்னணி நடிகர்களுடன் காமெடி ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் கூட தளபதி நடித்து வரும் லியோ படத்தில் தாம் இருப்பதாக அப்டேட் கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 15 நாட்களாக வீட்டிலேயே கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது இறப்புக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here