முகநூல் பக்கத்தில் உள்ள தவறான கணக்குகளை பின்தொடர வேண்டாம் என நடிகர் குமரன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை சமூகவலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
நடிகர் குமரன்
விஜய் டிவியின் பிரபல ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் குமரன். நடன கலைஞரான குமரன் விஜய் டிவியின் சில சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் தான் இவருக்கு பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த தொடரில் மூன்று கதாநாயகர்கள் நடித்து வந்தாலும் நடிகர் குமாரனுக்கென்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. இந்த தொடரில் குமரன் நடித்து வரும் கதிர் என்ற கதாப்பாத்திரத்துக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். குமரனின் நடனத்தில் நடிகர் விஜய்யின் மேனரிஸம் தெரிவதால் சின்னத்திரையின் இளைய தளபதி என்று ரசிகர்கள் இவரை செல்லமாக அழைப்பார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தல் – அமமுக கட்சி நேர்காணல் தேதி அறிவிப்பு!!
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் குமரன், பாடல் பாடியும், திரைப்பட பாடலுக்கு ஆடியும் வீடியோக்களை பதிவிடுவார். இவர் இன்ஸ்டாகிராமில் போடும் பதிவுகளுக்கு எப்போதுமே லைக்ஸ்கள் குவியும். இந்நிலையில் நடிகர் குமரன் ஒரு வீடியோ ஒன்றை தற்போது பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், குமரன் பெயரில் சமூகவலைதளபக்கத்தில் போலியான கணக்குகள் உள்ளதாம். அந்த கணக்குகளிலிருந்து அனுப்பப்படும் மெசேஜ்களுக்கு பதில் செய்யவேண்டாம் என ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் குமரன் இன்ஸ்டாகிராம் கணக்கை மட்டுமே பயன்படுத்துவதால் அதில் மட்டுமே அவரை பின்தொடரும் படி கூறியுள்ளார்.