“டாடா” படத்தின் வெற்றியை அவங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.., பிரிவை நினைத்து கண்கலங்கிய கவின்!!!

0
"டாடா" படத்தின் வெற்றியை அவங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.., பிரிவை நினைத்து கண்கலங்கிய கவின்!!!

நடிகர் கவின் நடித்த டாடா படத்தின் சக்சஸ் மீட்டில் தனது உயிர் நண்பரை குறித்து அவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் கவின்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கவின். தற்போது இவர் நடித்த டாடா திரைப்படம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி திரையரங்கில் வெளியாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் எந்த வித நெகட்டிவ் கமெண்ட்ஸ் இன்றி வசூலை வாரி குவித்து வருகிறது. இப்படம் வெளியாகி மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 8 கோடிகளை அள்ளியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இந்த திரைப்படம் கவினின் சினிமா கேரியரில் ஒரு திருப்பு முனையாக அமைந்து வருகிறது. இதனால் அவருடைய மார்க்கெட் உயர தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த டாடா படத்தின் சக்சஸ் மீட்டில் தனது உயிர் நண்பரை குறித்து அவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த விஷயத்தில் வீக்காகி கோட்டை விட்ட டாப் 5 தமிழ் நடிகர்கள்., இதுல First இடத்தில் இருக்கிறது இவரா?

அவர் பேசியதாவது, டாடா படத்தை எனது உயிர் நண்பன் மணிகண்டனுக்கு சமர்ப்பிக்கிறேன். நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு அவனும் ஒரு காரணம். நான் சின்னத்திரையில் நடித்த போதே அவன் விசில் அடித்து அலப்பறை செய்தான். ஆனால் இப்பொழுது நான் வெள்ளித்திரையில் நடிக்கிறேன். அதை பாராட்ட அவன் உயிரோடு இல்லை என்று கண்கள் கலங்கி பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here