சூடுபிடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு.., பறந்து சென்ற படக்குழுவினர்! எல்லாம் ஒரு முடிவோட இருகாங்க!!

0
சூடுபிடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு.., பறந்து சென்ற படக்குழுவினர்! எல்லாம் ஒரு முடிவோட இருகாங்க!!
சூடுபிடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு.., பறந்து சென்ற படக்குழுவினர்! எல்லாம் ஒரு முடிவோட இருகாங்க!!

நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியன் 2:

தென்னிந்திய தமிழ் சினிமாவின் மூத்த கலைஞராகவும், அரசியல் சாணக்கியராகவும் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த விக்ரம் திரைப்படம் கோலிவுட் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது. தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படைப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் எடுத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. இப்படி பிசியாக நடித்து வரும் நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வருகிறார். இந்த நிலையில் இந்த வாரத்தின் இறுதியுடன் பிக்பாஸ் முடிவடைய இருக்கிறது.

சூர்யாவுக்கு டாடா காட்டி சிவகார்த்திகேயனுக்கு கொக்கி போட்ட இளம் இயக்குனர்., இது நம்ம லிஸ்டுலயே இல்லையே!!

இந்நிலையில் இந்தியன் 2 படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது, உலக நாயகன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி 22ம் தேதி திருப்பதியில் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here