போட்றா வெடிய.., 35 வருடங்களுக்கு பிறகு கமலுடன் கூட்டணி வைத்த பிரபல இயக்குனர்.., வெளியான மாஸ் அப்டேட்!!

0
போடற வெடிய.., 35 வருடங்களுக்கு பிறகு கமலுடன் கூட்டணி வைத்த பிரபல இயக்குனர்.., வெளியான மாஸ் அப்டேட்!!
போடற வெடிய.., 35 வருடங்களுக்கு பிறகு கமலுடன் கூட்டணி வைத்த பிரபல இயக்குனர்.., வெளியான மாஸ் அப்டேட்!!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் வெற்றியை தொடர்ந்து தற்போது அவரின் 234 வது படத்தை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்:

கோலிவுட்டில் நடிகர், பாடகர், இயக்குனர், கதை ஆசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர் தான் நடிகர் கமல்ஹாசன். சமீபத்தில் இவர் நடித்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இப்படம் 400 கோடிக்கு மேல் வசூலித்தது என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த பிஸியான நேரத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கமல் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆமாங்க உலக நாயகன் நடிக்கும் 234 வது படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாக கூறப்படுகிறது.

கதிரை காப்பாற்ற விரைந்து வந்த மூர்த்தி, ஜீவா.,,நெகிழ்வான தருணம்., இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

இப்படத்தை கமல், மணிரத்னம், மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் ஆகியோர் சேர்ந்து தயாரிக்கிறார்கள். மேலும் இந்த படத்திற்கு ஏ. ஆர் . ரகுமான் இசையமைக்கிறார். பெயரிடப்படாத இப்படம் 2024ம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்திற்கு பிறகு, அதாவது 35 வருடங்கள் கழித்து இந்த படத்தில் கமலுடன் சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here