கதிரை காப்பாற்ற விரைந்து வந்த மூர்த்தி, ஜீவா.,,நெகிழ்வான தருணம்., இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

0
கதிரை காப்பாற்ற விரைந்து வந்த மூர்த்தி, ஜீவா.,,நெகிழ்வான தருணம்., இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!
கதிரை காப்பாற்ற விரைந்து வந்த மூர்த்தி, ஜீவா.,,நெகிழ்வான தருணம்., இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கதிருக்கு மிக பெரிய ஆபத்து என்று தெரிந்தவுடன் மூர்த்தியும், ஜீவாவும் எதையும் யோசிக்காமல் கிளம்பி வந்தனர்.இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிரை கத்தியால் குத்த வந்த ரவுடியை மூர்த்தி வந்து தடுத்து விட்டார். இதையடுத்து மூர்த்தி, ஜீவா, கதிர் மூன்று பேரும் சேர்ந்து அந்த ரவுடிகள் அனைவரையும் அடித்து விரட்டிவிட்டனர். மேலும் கதிர் நீங்க எப்படி அண்ணா வந்தீங்க என கேட்க, முல்லை நான்தான் இங்கு நடந்த விஷயம் குறித்து சொன்னேன் என்று சொல்கிறார். அப்போது கதிர், அண்ணா நீங்க வருவீங்கன்னு நா எதிர் பார்க்கல என்று மூர்த்தி அண்ணனை கட்டிப்பிடித்து அழுகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் அவர், நீங்க ஏன் தம்பிங்க இல்லைடா என்னோட பசங்க என்று கட்டி தழுவி பாசத்தை பரிமாறி கொள்கின்றனர். இதை தொடர்ந்து சூப்பர் ஜோடி போட்டியில் வெற்றி பெற்றவர் யார் என்பது குறித்து அறிவிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அப்போது இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றவர்கள் முல்லை-கதிர் ஜோடி தான் என சொல்கிறார். அவர்களுக்கு 10 லட்ச ரூபாயும் பரிசாக காத்து கொண்டு உள்ளது எனவும் கூறுகிறார். இந்நிலையில் நிகழ்ச்சியின் மேடைக்கு கதிர், முல்லை, மூர்த்தி, ஜீவா ஆகியோர் செல்ல 10 லட்ச ரூபாய் பரிசு கதிர்- முல்லைக்கு வழங்கப்படுகிறது.

சக்தி-குந்தவை கல்யாணத்தை நிறுத்தும் குணசேகரன்.., அதிரடியாக களமிறங்கும் ஜனனி.., ட்விஸ்டுகளுடன் எதிர் நீச்சல் சீரியல்!!

இதையடுத்து கதிர், இந்த போட்டியில் வெற்றி பெற்றதை விட அண்ணன்கள் எனக்கு ஒரு பிரச்சனைனு ஓடி வந்தது தான் ரொம்ப சந்தோஷம் என்று மிகவும் நெகிழ்வுடன் பேசினார். இதையடுத்து மூர்த்தி சூப்பர் ஜோடி பட்டத்தை இவுங்களுக்கு கொடுக்கலைன்னா தான் நான் சண்டை போட்டுருபேன், கதிரும் முல்லையும் போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு சந்தோஷம் என்று கூறுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோட் முடிவடைகிறது. இந்த நிகழ்வால் அண்ணன் தம்பிகள் சேர்ந்து விட்டனர், இதையடுத்து கதிர் அவர் குடும்பத்துடன் சேர்ந்து விடுவாரா என்பதை வரும் எபிசோடில் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here