இந்திய நட்சத்திர வீரர் ஆஸ்திரேலிய பேட்மிண்டனில் இருந்து விலகல்…, இது தான் காரணமா?? முழு விவரம் உள்ளே!!

0
இந்திய நட்சத்திர வீரர் ஆஸ்திரேலிய பேட்மிண்டனில் இருந்து விலகல்..., இது தான் காரணமா?? முழு விவரம் உள்ளே!!
இந்திய நட்சத்திர வீரர் ஆஸ்திரேலிய பேட்மிண்டனில் இருந்து விலகல்..., இது தான் காரணமா?? முழு விவரம் உள்ளே!!

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரரான லக்ஷ்யா சென் விலகுவதாக அறிவித்துள்ளார்.

லக்ஷ்யா சென்:

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF) சார்பாக பாரிஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஓபன் தொடர் நடைபெற்றது. இந்த தொடரை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் வரும் 15ம் தேதி முதல் 20 ம் தேதி வரை சிட்னியில் ஓபன் பேட்மிண்டன் நடைபெற இருக்கிறது. இதில், ஆடவர் மற்றும் மகளிருக்கான ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த தொடரில், இந்தியா சார்பாக நட்சத்திர வீரர்களான லக்ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, சாய்னா நேவால், மாளவிகா பன்சோட், மிதுன் மஞ்சுநாத், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். இதில், உலக தரவரிசையில் 8 வது இடத்தில் இருக்கும் லக்ஷ்யா சென், சமீபத்தில் டிவைடட் செப்டம் என்ற அறுவை சிகிச்சை செய்திருந்தார். இதன் பிறகு சில ஓபன் தொடர்களில் பங்குபெற்ற இவர் தற்போது, தொண்டை வலி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

T20 WC 2022: பேட்டிங் & பவுலிங்கில் மிரட்டும் இந்திய வீரர்கள்…, வெளியாகிய டாப் 10 பட்டியல்!!

இது குறித்து பேசிய லக்ஷ்யா சென், பூரணமாக குணமடைந்து அடுத்த சீசனில் பங்கு பெறுவேன் என்று கூறியுள்ளார். இவர், நடப்பு ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் மற்றும் தாமஸ் கோப்பைகளில் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியதோடு, காமன்வெல்த் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here