பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரும் லவ் ட்ராக்.., இத நம்ம யாருமே எதிர் பாக்கலையே!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரும் லவ் ட்ராக்.., இத நம்ம யாருமே எதிர் பாக்கலையே!!
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரும் லவ் ட்ராக்.., இத நம்ம யாருமே எதிர் பாக்கலையே!!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவை கல்யாணம் செய்ததில் இருந்து பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு ரேஷன் கார்டுக்கு கோபி, ராதிகா பாக்கியாவை சமாளிக்க முடியாமல் படாத பாடு பட்டு வருகிறார். ஒரு வழியாக இன்றைய எபிசோடில் ரேஷன் கார்டை கண்டுபிடித்து ராதிகாவிடம் கொடுக்கிறார்.

மறுபுறம் எழிலை கல்யாணம் பண்ண வேண்டும் என்ற ஆசையில் வர்ஷினி எழில் வீட்டிற்கே வந்து அனைவருக்கும் ஐஸ் வைக்கிறார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் எழிலுக்கு வர்ஷினியை திருமணம் செய்து வைக்கலாம் என பேச்சு எடுக்கின்றனர். ஆனால் எழில் வீட்டில் உள்ளோரை எப்படி சமாளித்து அமிர்தாவை லவ் பண்ணும் விஷயத்தை சொல்ல போகிறார் என்று தெரியவில்லை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி பாக்கியலட்சுமி சீரியல் நாளுக்கு நாள் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் எழிலுக்கு ஜோடியாக அமிர்தா கேரக்டரில் நடிக்கும் ரித்திகாவிடம் இன்ஸ்டாவில் ரசிகர்கள் எழில் அமிர்தா ஜோடியாக நடிக்கும் காட்சிகள் எப்போது வரும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

போடற வெடிய.., 35 வருடங்களுக்கு பிறகு கமலுடன் கூட்டணி வைத்த பிரபல இயக்குனர்.., வெளியான மாஸ் அப்டேட்!!

இதற்கு ரித்திகா எழில் அமிர்தா நடிக்கும் லவ் சீன்கள் டிசம்பர் மாதம் ஒளிபரப்பாகும் என கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது எப்படியும் இவர்களது காதல் விஷயம் எழில் வீட்டிற்கு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்து வரும் எபிசோட்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here