திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த ஜெயம் ரவி.., இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் தற்போது சைரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்க, கௌஷிக் மஹாதா, யோகிபாபு, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இது ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த பிஸியான நேரத்தில் நடிகர் ஜெயம் ரவி குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக, ஜெயம் ரவி தனது நண்பர்களுடன் பொழுதைக் கழித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here