சென்னையில் கூடுதலாக இவ்ளோ பேருந்துகள் இயக்கம்? அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு!!

0

சென்னை மாநகரில் போக்குவரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மெட்ரோ ரயில் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சாலை போக்குவரத்துக்கு சேவையை எளிமையாக்க, கிளாம்பாக்கத்தில் பலவித வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையத்தை சமீபத்தில் தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இந்தப் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாக தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது அரசு போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது தினசரி இயக்கக்கூடிய ஆயிரத்து 124 பேருந்துகளுடன் நேற்று(பிப்ரவரி 10) கூடுதலாக 612 பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கியதாக கூறப்பட்டுள்ளது. நேற்று மட்டும் கிளாம்பாக்கத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here