மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கடத்தல் வழக்கு – சர்ச்சையில் சிக்கி திணறும் நடிகர் திலீப் குமார்!!

0

கேரளா நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்து ஜாமீனில் வெளிவந்த நடிகர் திலீப் குமாரின் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

நடிகர் திலீப்குமார்:

மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் திலீப் குமார். 1996-ம் ஆண்டில் சல்லாபம் எனும் படத்தில் நடிகை மஞ்சுவாரியருடன் நடித்த போது காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்தார். அதன் பிறகு 2015-ம் ஆண்டில் மஞ்சு வாரியரை விட்டு பிரிந்து அடுத்த ஆண்டே நடிகை காவ்யா மாதவனை மணந்து கொண்டார். 2017 ஆம் ஆண்டு கேரளாவில் பதிவான நடிகையின் கடத்தல் வழக்கு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த வழக்கில் நடிகர் திலீப் குமாருக்கு சம்பந்தம் இருப்பதாக கூறி அவரையும் கைது செய்தனர். ஆனால் அவர் ஜாமீனில் வெளி வந்து விட்டார்.

இந்த நிலையில் நடிகர் திலீப்பின் நண்பரும், பிரபல மலையாள இயக்குனருமான பால சந்திரகுமார் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நடிகர் திலீப்புக்கு எதிராக தெரிவித்த கருத்துகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் இந்த கருத்துகளின் அடிப்படையில் நடிகர் திலீப்பை மீண்டும் விசாரிக்க போலீசாருக்கு கொச்சி நீதிமன்றம் அனுமதி பிறப்பித்து உள்ளது.மேலும் இந்த வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி பைஜூ பவுலோஸ் என்பவரை நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து மிரட்டி உள்ளதாகவும், இவ்வாறு மிரட்டிய குற்றத்திற்கும் சேர்த்து அவர்கள் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here