தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த RRR பட நடிகர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவினர்!!

0
தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த RRR பட நடிகர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவினர்!!
தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த RRR பட நடிகர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவினர்!!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ்.. கடைசியாக இவர் நடித்த திருச்சிற்றம்பலம், வாத்தி திரைப்படம் 100 கோடி வசூலித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுபோக சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ். ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ஐயோ.., உன்ன மாப்பிள்ளைன்னு மலை மாதிரி நம்புனேனே…, அம்பலமான அர்ஜுனின் உண்மை முகம்!!

அதாவது, ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த அமெரிக்க நடிகர் எட்வர்ட் சொனின்ப்ளிக் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் படத்தோட எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் இன்று குற்றாலத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here