மாறன் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. அந்த ஒரு விஷயத்தை செய்ய மறுக்கும் தனுஷ்!!

0
மாறன் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. அந்த ஒரு விஷயத்தை செய்ய மறுக்கும் தனுஷ்!!
மாறன் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. அந்த ஒரு விஷயத்தை செய்ய மறுக்கும் தனுஷ்!!

தமிழகத்தில் நிலவும் கொரோனா பரவல் காரணமாக நடிகர் தனுஷின் மாறன் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் இதில் தனுஷிற்கு சுத்தமாக விருப்பமே இல்லையாம்.

மாநிலத்தில் விரைவில் தளர்த்தப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

மாறன் திரைப்படம்:

தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இவர் தற்போது நடிகர் தனுஷை வைத்து மாறன் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை இசையமைப்பாளர் ஜி. வி பிரகாஷ் இசை அமைத்து உள்ளார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் நிலவும் கொரோனா பரவல் காரணமாக சமீபத்தில் படக்குழு இந்த படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய போவதாக அறிவித்து இருந்தனர்.

மாறன் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. அந்த ஒரு விஷயத்தை செய்ய மறுக்கும் தனுஷ்!!
மாறன் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. அந்த ஒரு விஷயத்தை செய்ய மறுக்கும் தனுஷ்!!

ஆனால் நடிகர் தனுஷ் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என்பதே தனுஷின் ஆசையாம். ஆனால் படக்குழு அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கடும் கோபத்தில் உள்ளாராம் தனுஷ். எப்போது தனுஷ் படம் வெளிவந்தாலும் தனது சமூக வலைதள பக்கத்தில் அது குறித்த அப்டேட்டுகளை தனுஷ் வெளியிடுவார். ஆனால் தற்போது மாறன் படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் தனுஷ் வெளியிடவில்லை. இதே போல் தான் இதற்கு முன்பு ஒடிடியில் வெளியான ஜகமே தந்திரம் படத்திற்கும் தனுஷ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here