இயக்குனராக களமிறங்கும் தனுஷ்.., ஹீரோ இந்த விவாகரத்து நடிகர் தான்.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
இயக்குனராக களமிறங்கும் தனுஷ்.., ஹீரோ இந்த விவாகரத்து நடிகர் தான்.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
இயக்குனராக களமிறங்கும் தனுஷ்.., ஹீரோ இந்த விவாகரத்து நடிகர் தான்.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

நடிகர் தனுஷ் பிசியாக நடித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ்:

தென் இந்திய தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் என ஆல் ரவுண்டராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் தனுஷ். சமீபத்தில் இவர் நடித்த நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து வாத்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுமட்டுமின்றி இவர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்காக ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியான நிலையில் தற்போது படத்தின் ஹீரோ, வில்லன் மற்றும் தயாரிப்பாளர் யார் என்பது குறித்து முக்கிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

வருங்கால வைப்பு நிதி பயனர்களுக்கு ஷாக்., இந்த காலாண்டுக்கான வட்டி விகிதம் 7.1%மாக அறிவிப்பு!!

அதாவது நடிகர் தனுஷ் இயக்கும் இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், எஸ் ஜே சூர்யா வில்லனாகவும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. குறிப்பாக தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்கும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here