தோனியை பின் தொடரும் ஹர்திக் பாண்டியா…, 3 விஷயங்களால் இந்திய அணியின் கேப்டனாவாரா??

0
தோனியை பின் தொடரும் ஹர்திக் பாண்டியா..., 3 விஷயங்களால் இந்திய அணியின் கேப்டனாவாரா??
தோனியை பின் தொடரும் ஹர்திக் பாண்டியா..., 3 விஷயங்களால் இந்திய அணியின் கேப்டனாவாரா??

இந்திய அணியின் டி20 போட்டியின் கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்டியா, தோனியை போல செயல்பட்டு வருவதாக இந்த 3 விஷயங்கள் மூலம் தெரிகிறது.

ஹர்திக் பாண்டியா:

இந்திய அணி இந்த ஆண்டின் முதல் போட்டியை இலங்கை அணிக்கு எதிராக வெற்றியுடன் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியை வழி நடத்திய ஹர்திக் பாண்டியா, தோனியின் கேப்டன்சியை பின் தொடர்ந்திருப்பது தெளிவாக தெரிகிறது. அதாவது, அறிமுக ஆட்டத்தில் சிவா மாவிக்கு பவுலிங்கை தொடர ஹர்திக் பாண்டியா, அடிபட்டாலும் பரவ இல்லை, ஆதரவாக நான் இருக்கிறேன் என தைரியத்தை அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் மூலம், சிவா மாவி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். மேலும், கடைசி ஓவரில் 13 ரன்கள் எதிரணிக்கு தேவைப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா அக்சர் படேல் மீது நம்பிக்கை வைத்து பந்து வீச அழைத்திருந்தார். இவரது நம்பிக்கைக்கு ஏற்றாற் போல், அக்சார் படேலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இயக்குனராக களமிறங்கும் தனுஷ்.., ஹீரோ இந்த விவாகரத்து நடிகர் தான்.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இதையெல்லாம் விட, ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை, பத்தும் நிசங்கா அடிக்க, சஞ்சு சாம்சனுக்கு மிக அருகில் தான் அந்த பந்து வீழ்ந்தது. சஞ்சு நினைத்திருந்தால் அந்த பந்தை கேட்ச் செய்திருக்கலாம். இது சஞ்சுவுக்கு தெரியும். இந்த செயலை பார்த்த ஹர்திக் பாண்டியா, சஞ்சுவை பார்த்து சிறு புன்னகை செலுத்தி விடுவிட்டார். வேறு கேப்டன்கள் இருந்தால், பந்தை மிஸ் செய்தற்கு முறைக்கவாது செய்திருப்பார்கள். இதனால் தான், தோனியை போல ஹர்திக் பாண்டியா செயல்படுகிறார் என கூறப்பட்டு வருகிறது. இந்த செயல் மூலம் இவர் இந்திய அணியின் கேப்டன் ஆவதற்கும் அதிக வாய்ப்புள்ளது என கூறப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here