வருங்கால வைப்பு நிதி பயனர்களுக்கு ஷாக்., இந்த காலாண்டுக்கான வட்டி விகிதம் 7.1%மாக அறிவிப்பு!!

0
வருங்கால வைப்பு நிதி பயனர்களுக்கு ஷாக்., இந்த காலாண்டுக்கான வட்டி விகிதம் 7.1%மாக அறிவிப்பு!!
வருங்கால வைப்பு நிதி பயனர்களுக்கு ஷாக்., இந்த காலாண்டுக்கான வட்டி விகிதம் 7.1%மாக அறிவிப்பு!!

மத்திய அரசு ஊழியர்கள் சேமித்து வைக்கும், பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் நடப்பு 2023, மார்ச் வரை 7.1% ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான அறிவிப்பு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு தங்கள் பணியின் போது, பிடித்தம் செய்யப்படும் தொகை, பொது வருங்கால வைப்பு நிதி என்ற சமூக பாதுகாப்பு திட்டத்தில் சேமிக்கப்படுகிறது. இந்த சேமிப்புகள் அனைத்தும், ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அவர்களுக்கு, மொத்தமாக வழங்கப்படுவது வழக்கம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், பொது வருங்கால வைப்பு நிதியில், பயனடையும் பயனர்களுக்கு, வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிதியமைச்சகம், ஜனவரி 2023 முதல் மார்ச் 2023 வரையிலான முதல் காலாண்டில் இவர்களுக்கான வட்டி விதம் 7.1%மாக தொடரும் என அறிவித்துள்ளது.

IND vs SL T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா?? இலங்கைக்கு எதிராக நாளை 2வது போட்டி!!

இந்த பொது வருங்கால வைப்பு நிதியில், மாநில ரயில்வே ஊழியர்கள், ஆயுதப்படை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் பயன்பெற்று வருகின்றனர். தற்போது இவர்களுக்கான வட்டி விகிதம் குறித்த இந்த அறிவிப்பு பயனர்களிடையே, ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here