விஜய்க்கு போட்டியாக தனுஷ் போட்ட மாஸ்டர் பிளான்., தேதியுடன் அவரே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0
விஜய்க்கு போட்டியாக தனுஷ் போட்ட மாஸ்டர் பிளான்., தேதியுடன் அவரே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
விஜய்க்கு போட்டியாக தனுஷ் போட்ட மாஸ்டர் பிளான்., தேதியுடன் அவரே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

நடிகர் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து சமூக வலைதளத்தில் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ்:

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்டு கொடி கட்டி பறப்பவர் தான் நடிகர் தனுஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது வெங்கி அட்லூரி படைப்பில் வாத்தி படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் பெரும் வரவேற்பை பெற்றது.

விஜய், அஜித் ரசிகர்களே ரெடியாகுங்க.., ஆன்லைன் புக்கிங் இந்த தேதியில் இருந்து ஆரம்பம்!!

இப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழா குறித்து ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் அடுத்த மாதம் 17ஆம் தேதி தியேட்டருக்கு வருவதற்கு முன்பு பிப்ரவரி முதல் வாரத்திலேயே இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் பிளான் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த தனுஷ் ரசிகர்கள் படுகுஷியில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here