விஜய், அஜித் ரசிகர்களே ரெடியாகுங்க.., ஆன்லைன் புக்கிங் இந்த தேதியில் இருந்து ஆரம்பம்!!

0
விஜய், அஜித் ரசிகர்களே ரெடியாகுங்க.., ஆன்லைன் புக்கிங் இந்த தேதியில் இருந்து ஆரம்பம்!!
விஜய், அஜித் ரசிகர்களே ரெடியாகுங்க.., ஆன்லைன் புக்கிங் இந்த தேதியில் இருந்து ஆரம்பம்!!

நடிகர் விஜய் மற்றும் அஜித் நடிப்பில் உருவான வாரிசு, துணிவு திரைப்படங்கள் வருகிற ஜனவரி 11ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் டிக்கெட் முன்பதிவு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு – துணிவு:

கோலிவுட் வட்டாரங்களில் மாஸ் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர்கள் தான் நடிகர் விஜய் மற்றும் அஜித் குமார். கடந்த சில வாரங்களாக எங்கு பார்த்தாலும் துணிவு மற்றும் வாரிசு படத்தை குறித்து தான் பேச்சு போய்க்கொண்டிருக்கிறது. பொதுவாக அஜித், விஜய் படங்கள் தனித்தனியாக வெளியானாலே திருவிழா போல் கொண்டாடி வருவார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் இம்முறை ஒரே சமயத்தில் இருவரின் படங்களும் வெளியாக உள்ளது என்பதால் ரசிகர்களுக்கு அது டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இருவரின் படங்கள் மோதிக்கொள்வதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். சமீபத்தில் இப்படங்களின் டிரைலர்கள் வெளியாகி இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழக வாகன ஓட்டிகளே உஷார்., இனி அபராதம் வீடு தேடி வரும்! அரசின் நடவடிக்கை!!

இந்த இரண்டு திரைப்படங்களும் வருகிற ஜனவரி மாதம் 11ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், தற்போது தியேட்டர்களில் முன்பதிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வருகிற சனிக்கிழமை ஜனவரி 7ம் தேதி இரவு முதல் வாரிசு மற்றும் துணிவு படத்தை புக் செய்யலாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிறப்பு காட்சிகள் ஒரே நேரத்தில் வைக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர்களிடம் தியேட்டர் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here