மீண்டும் பதைபதைக்க வரும் டிமாண்டி காலனி 2.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

0
மீண்டும் பதைபதைக்க வரும் டிமாண்டி காலனி 2.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!
மீண்டும் பதைபதைக்க வரும் டிமாண்டி காலனி 2.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

நடிகர் அருள்நிதி நடித்து சூப்பர் ஹிட்டான டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

டிமாண்டி காலனி:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அருள்நிதி. திரையுலகில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பவர்களில் இவரும் ஒருவர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான தேஜாவு, டைரி ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவர் அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் அருள்நிதி சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் டிமாண்டி காலனி என்றால் அது மிகையாகாது. தற்போது வரும் பேய் படங்கள் போல் இல்லாமல் வித்தியாசமான திரைக்கதையில் அமைத்திருப்பார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு? கட்டணத்தை ஓட்டுநர்களே மாற்ற அனுமதி? உயர் நீதிமன்றம் அதிரடி!!

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் லீடு ரோலில் நடிக்க இசையமைப்பாளர் சாம் இசையமைக்கிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here