பாஜகவில் இணைகிறாரா நடிகர் அர்ஜுன்?? பாஜக தலைவருடன் சந்திப்பு!!

0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வரப்போகும் தேர்தலில் பாஜகவுடன் நடிகர் அர்ஜுன் இணையவுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் அர்ஜுன்

90களில் தமிழ் சினிமாவில் ஆக்சன் நாயகனாக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். திரையுலகில் ‘ரிதம்’, ‘ஜெய்ஹிந்த்’ உள்ளிட்ட சிறந்த திரைப்படங்களை கொடுத்துள்ளார் அர்ஜுன். தற்போது வரை சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நடிகர் அர்ஜுன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக தமிழ் நடிகைகள் குஷ்பு, கௌதமி, நமிதா, காயத்ரி ரகுராம் மற்றும் நடிகர் பிரபுவின் அண்ணன் ராம்குமார் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘ராஜா ராணி 2’ – ரௌடிகளால் சந்தியாவிற்கு வீட்டில் காத்திருக்கும் பேராபத்து – காப்பாற்றுவாரா சரவணன்!!

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அர்ஜுன் சென்னை செருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கட்டி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னாக அதை பார்வையிட வந்த பாஜக தலைவர் எல்.முருகன், நடிகர் அர்ஜுனை பாஜகவில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளார். தற்போது நடிகர் அர்ஜுன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் எல்.முருகன் ஆகியோரை நேரில் சந்தித்துள்ளார். இதைத்தொடர்ந்து நடிகர் அர்ஜுனும் பாஜகவில் இணைவார் என எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here