No Smoking Day – உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் புகை பழக்கத்தை கைவிடுவது எப்படி?

0

இன்று சர்வதேச புகைபிடித்தல் எதிர்ப்பு தினம் ஆகும். இந்த தினத்தில் மக்கள் புகைபிடித்தல் குறித்த விளைவுகளை அறிந்து கொள்ள வேண்டும் என்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. அதே போல் புகைபிடிப்பவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து எப்படி மீண்டு வரலாம் என்பது குறித்தும் விளக்கப்படுகின்றது.

புகை பழக்கம்

இன்று மக்கள் மத்தியில் பரவலாக இருக்கும் மிகவும் மோசமான பழக்கம் என்றால் அது புகைப்பழக்கம் தான். அதில் இருந்து மீண்டு வர பலர் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சிலருக்கு அதன் தீய விளைவுகள் தெரிந்திருந்தாலும் அதில் இருந்து மீண்டு வர முயற்சிகளை எடுக்கவில்லை. இதன் காரணமாக நாளுக்கு நாள் இந்த பழக்கம் மூலமாக மரணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. புகைபிடித்தல் பழக்கத்தினால் ஒருவருக்கு ஏற்படும் தீய விளைவுகளை பற்றி உணர்த்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10 ஆம் தேதி “புகை பிடித்தல் எதிர்ப்பு தினம்” கொண்டாடப்பட்டு வருகின்றது.

உத்தரகண்ட் மாநில புதிய முதல்வர் – தீரத் சிங் ராவத் தேர்வு!!

இந்த நாளில் மக்கள் மத்தியில் புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளை பற்றி தெரிவிப்பதே ஆகும். சிலருக்கு இதில் இருந்து எப்படி மீண்டு வருவது என்பது குறித்து தெரிவதில்லை. புகைபிடிப்பவர் சில வழிமுறைகளை பின்பற்றினால் அதில் இருந்து மீண்டு வருவது சுலபம் ஆகும். புகைபிடித்தல் மூலமாக ஒருவருக்கு சராசரியாக ரத்த புற்றுநோய், இதய பாதிப்புகள், தொண்டை புற்றுநோய் வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த பழக்கத்தில் இருந்து சுலபமாக மீண்டு வருவதற்கான வழிமுறைகள்,

  • சிலருக்கு மற்றவர்கள் புகைபிடிப்பதை பார்த்தால் புகைபிடிக்க தோன்றும், இது போன்ற காரணத்தால் அவர்களை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள்.
  • டீ குடித்து விட்டு புகைபிடித்தல், மது அருந்தும் போது புகைபிடித்தல், சாப்பிட்டவுடன் புகைபிடித்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் அதனையும் தவிர்த்து விடுங்கள்.
  • முதலில் மனதிற்குள் புகைபிடிக்கும் பழக்கத்தினை விட வேண்டும் என்று உறுதி எடுத்து கொள்ளுங்கள். அதற்கான தீவிரமான முயற்சிகளிலும் இறங்குங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.
  • புகைபிடிக்க வேண்டும் என்று தோன்றினால், அப்போது சிவிங்கு கம் பயன்படுத்துங்கள். இதன் மூலமாக மனம் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
  • புகைபிடிப்பதனால் அதிகமான மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால் அதனை தவிர்க்க பாருங்கள்.

புகைபிடிப்பதனால் உடல் நலத்தினை கெடுத்து கொள்ளாதீர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here