சம்பளம் மட்டும் தந்தால் போதாது.. அதோடு சேர்த்து வட்டியும் தரணும் – புது கண்டிஷன் போட்ட பிரபல நடிகர்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் அரவிந்த்சாமி சதுரங்க வேட்டை 2 படத்திற்காக தரவேண்டிய சம்பள பாக்கியுடன் சேர்த்து அதற்கான வட்டியும் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வட்டி கேட்ட நடிகர்:

கடந்த 2014ஆம் ஆண்டு, நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சதுரங்க வேட்டை. பலருடைய பாராட்டுக்களைப் பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம், அரவிந்த் சாமி நடிப்பில் அண்மையில் உருவானது. அவருக்கு நாயகியாக இந்த படத்தில் திரிஷா நடித்துள்ளார். சதுரங்க வேட்டை 2 படத்தை நிர்மல் குமார் என்பவர் இயக்கி வந்தார்.

இந்த படத்தின், படப்பிடிப்பு 2,3 வருடங்களாக நடைபெற்று வருவதால்,அரவிந்த் சாமிக்கு 50 லட்சம் வரை சம்பளம் பாக்கி இருந்து வந்துள்ளது. இதற்கு முன்னால்,அந்த பணத்தை வாங்கிக் கொள்ள பிரபல பைனான்சியர் முன்னிலையில் சம்மதம்  தெரிவித்த அரவிந்த்சாமி, தற்போது அதோடு சேர்த்து வட்டியும் போட்டுத் தர வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். தற்போது இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here