நடிகர் அஜித்துக்கு எதிராக கிளம்பிய சர்ச்சை., சட்ட விரோத செயலில் ஈடுபட்டதாக ஆதாரத்துடன் குற்றச்சாட்டு!!

0
நடிப்புல தான் இமயம்னு பார்த்தா குணத்துலையும் இப்படி இருக்கீங்களே அஜித்.., என்ன செஞ்சு இருக்காருன்னு பாருங்களே!!
நடிப்புல தான் இமயம்னு பார்த்தா குணத்துலையும் இப்படி இருக்கீங்களே அஜித்.., என்ன செஞ்சு இருக்காருன்னு பாருங்களே!!

நடிகர் அஜித் அண்மையில் தனது உயர் ரக பைக் மூலம் லடாக் எல்லை சென்ற நிலையில், தற்போது அவர் மீது சட்டவிரோத குற்றச்சாட்டு ஒன்று ஆதாரத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

அஜித் மீது குற்றச்சாட்டு:

நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில், AK 61 படத்தில் நடித்து வருகிறார். படங்களைத் தாண்டி, அஜித்துக்கு கார், பைக்  என்றால் அவ்வளவு உயிர். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போதும், பைக்கை வாடகைக்கு எடுத்துக் கொண்டு முக்கியமான இடங்களுக்கு பைக் ரைடு செல்வார். இது குறித்த புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிடுவார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அந்த வகையில், தனது சாகச குழுவினருடன்  அண்மையில் லடாக் எல்லை சென்றார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டார். தற்போது இவர் மீது, ஆதாரத்துடன் கூடிய குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதாவது லாடக் ட்ரிப்பிற்காக அஜித் ஓட்டிச் சென்ற பிஎம்டபிள்யூ பைக்கின் இன்சூரன்ஸ் முடிந்து 2 ஆண்டுகள் ஆனதாகவும், அதை புதுப்பிக்காமல் சட்ட விரோதமாக அஜித் பயணம் மேற்கொள்வதாகவும்  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கான ஆதாரமாக ஒரு போட்டோவும் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்து ரசிகர்கள் இன்ஷூரன்ஸ்  இல்லாத பைக்கில் தான் அஜித் உலகம் முழுவதும் சுற்றி வருகிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here