சீரியல் ஜாம்பவான் சன் டிவிக்கா இப்படி ஒரு பெயரு.. சர்ச்சைக்குரிய காட்சி – ரசிகர்கள் கடும் எதிர்ப்பு!

0

சின்னத்திரை உலகில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் சன் டிவி தொடருக்கு தனி மவுசு உண்டு. எவ்வளவு தான் பிற சேனல்கள் போராடினாலும் சன் டிவி இடத்தை எந்த தொலைக்காட்சியினாலும் பிடிக்க முடியவில்லை. இந்த சேனலில் தற்போது டெலிகாஸ்ட் செய்யப்படும் சுந்தரி, வானத்தை போல, ரோஜா ஆகிய தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இதற்கு அடுத்த இடத்தை பிடிக்கும் ஒரு சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். ஆணாதிக்க குடும்பத்தில் சிக்கி தவிக்கும் பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரேணுகா கதாபாத்திரம் தன்னுடைய அம்மாவை போய் சாவு என கூறுவது போல காட்சிகள் இடம் பெற்றது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த காட்சி தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிக தற்கொலைகள் நடக்கிறது. இதனால் இது போன்ற காட்சிகள் தற்கொலையை ஊக்குவிப்பது போல உள்ளது. எனவே இந்த சீன்கள் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here