தனுசுக்கு விடாப்பிடியாக நோ சொல்லிய பிரபல நாயகி.., ஆனா அதுக்கு மட்டும் ஓகேவாம்!! இது என்னடா புது கதை!!

0
நடிகர்  தனுசுடன் 2 டாப் நாயகிகள் திடீர் சந்திப்பு - வைரலாகும் ரிசன்ட் போட்டோஸ்!!

உலகமெங்கும் அனைத்து திரையரங்குகளில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் அமோக வெற்றியை நோக்கி செல்கிறது. படம் ரிலீசான நான்கே நாட்களில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்ததால் படத்தின் மொத்த டீமும் அளவுகடந்த சந்தோஷத்தில் கொண்டாடி வருகிறாரகள். இந்நிலையில் உலக அழகி ஐஸ்வர்யா ராய், தனுஷ் படத்தில் நடித்த மறுத்த ஒரு விஷயம் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது நடிகர் தனுஷ் படத்துக்கெனவே தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுவும் இந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை பார்த்த தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் தனுஷின் அடுத்த படத்துக்காக காத்திருக்கின்றனர். இப்படி இருக்கையில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நெகடிவ் ரோலில் பாலிவுட் நடிகை கஜோல் நடித்து வேற லெவல் ரீச்சை பெற்றது.

இதுல என்ன ஒரு ட்விஸ்டுன்னா..இந்த நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்க பட குழு ஐஸ்வர்யா ராயிடம் தான் முதலில் கேட்டிருக்கிறார்கள். கதையை கேட்ட அவர் இது போன்ற நெகட்டிவ் கேரக்டரில் என்னால் நடிக்க முடியாது, என் ரேஞ்சே வேற என்று கூறியிருக்கிறார். அப்படி சொன்னவங்க இன்னைக்கு மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். சொல்லப்போனால் அந்த கதாபாத்திரம் விஷமுள்ள நாகப்பாம்புக்கு சமமான கேரக்டர்.

இதனால் பலரும் தனுஷ் படத்தில் நெகடிவ் ரோலுக்கு சம்மதிக்காத ஐஸ்வர்யா ராய் இந்த படத்துக்கு மட்டும் எப்படி நடிக்க ஒத்துக்கிட்டாங்கனு கேள்வியை எழுப்பி வருகின்றனர். இப்படி ஒரு பக்கம் கேள்வி எழ, அதற்கு மற்றொரு தரப்பினர் ஐஸ்வர்யா ராய்க்கு குரு ஸ்தானத்தில் இயக்குனர் மணி ரத்தினம் இருப்பதால் தான் இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்து இருப்பார் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here