விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சிறப்பு பேருந்து வசதி – தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு!!

0

நாளை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

சிறப்பு பேருந்துகள்:

தற்போது ஆட்சியை பிடித்த தி.மு.க அரசு பல திட்டங்களை அமல்படுத்தி மக்களுக்கு சேவையை தொடர்ந்து செய்து வருகின்றனர். மகளிர்களுக்கு இலவச பேருந்தை அறிவித்து மக்களுக்கு பெரிதளவு பயனுள்ளதாக அமைந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பல பண்டிகைகள் கொண்டாடி வருவது வழக்கத்தில் மாறாத ஒன்று.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் மக்கள் கொண்டாடும் பண்டிகையில் முன்னோடியாக இருக்கும் விழாவான விநாயகர் சதுர்த்தி என்றால் மிகையாகாது. இந்நிலையில் நாளை நடக்க இருக்கும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஒரு தகவலை தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, விநாயக சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் அனைத்து பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பி வர பயணம் செய்யவும் கிட்டத்தட்ட 350 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவையை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்தி கொள்வதற்கு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலால் பயணிகள் ஆனந்தத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here