அடடா.., Made For Each Other-னா நீக்க தான்.., ஷபானா-ஆர்யன் ஜோடியின் மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படம்!!

0

சின்னத்திரை, வெள்ளித்திரை என்ற வித்தியாசம் ஏதும் ரசிகர்கள் இப்போதெல்லாம் பார்ப்பதே இல்லை. முன்பெல்லாம் திரைப்பட நடிகை, நடிகர்களுக்கு தான் அதிகளவு ரசிகர் பட்டாளம் குவியும். ஆனால் தற்போது சீரியல் நடிகர்களுக்கு உருவாகும் ரசிகர் கூட்டமே அதிகமாக உள்ளது. இப்படி ரசிகர்கள் குவிவதாலே எளிதாக வெள்ளித்திரைக்குள் என்ட்ரி கொடுத்து விடுகின்றனர்.

இப்படி அதிக ரசிகர்களை குவித்திருக்கும் நடிகர்கள் குறித்த பட்டியல் போடணும்னா லிஸ்ட் பெருசா போகும். அந்த வரிசையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிக எபிசோடுகளை கடந்து ஹிட் கொடுத்த செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா, பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். செம்பருத்தி சீரியலின் மூலம் இவர் பல ரசிகர்களையும் பெற்றார்.

சீரியலில் நடிப்பது மட்டுமின்றி தனியாகவும் தனது தோழிகளுடனும் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை ஷேர் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷபானா சின்னத்திரை நடிகர் ஆர்யனை காதலித்து வருவதாக ரசிகர்களும் சந்தேகத்தில் இருந்தனர். ஆனால் அதை உறுதி செய்யும் விதமாக திடுதிப்புனு யாரிடமும் சொல்லாமல், நெருக்கமான சொந்தங்களுக்கு மத்தியில் திருமணமும் செய்து கொண்டார்.

அதாவதும் இருவரும் வேறு வேறு மதம் என்பதால் அவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் தான் இப்படி அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டனர் எனவும் தெரிய வந்தது. இந்நிலையில் ஷபானா பிறந்தாளுக்கு ஆர்யன் நிறைய சர்ப்ரைஸ் கொடுத்து, அவுட்டிங்க் கூட்டி சென்றுள்ளார். அப்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிரது. இதனால் ரசிகர்களும் அடுத்த சூர்யா – ஜோதிகா என லைக்குகளை அள்ளி தெளிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here