ஆரோக்ய சேது செயலி கட்டாயம் – உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய விதிகள் வெளியீடு..!

0

இந்தியாவில் மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்க உள்ள நிலையில் அதில் பயணம் செய்பவர்கள் மொபைலில் மத்திய அரசின் ஆரோக்ய சேது செயலி கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமான சேவை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மார்ச் மாதம் முதல் உள் மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மற்றும் அவசர தேவைக்காக சரக்கு விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை குறைந்த அளவு எண்ணிக்கையில் தொடங்கும் என மத்திய போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்தார்.

இதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் விமான நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய எஸ்ஓபி விதிகளை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதில் விமான நிலையத்தில் நுழையும் முன் உடல் வெப்பநிலை பரிசோதனை கட்டாயம், இதற்காக தெர்மல் ஸ்க்ரீனிங் பாதை வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்ய உள்ள 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தவிர அனைவரும் தங்களது மொபைலில் ஆரோக்ய சேது செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் அனைத்து தகவல்களும் பதிவு செய்திருக்க வேண்டும் என விதிமுறை விதிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here