மதுபானம் வாங்க ஆதார் அட்டை அவசியம் – உயர்நீதிமன்றம் உத்தரவு..!

0
TASMAC
TASMAC

தமிழகத்தில் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் (மே 7) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதனை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்`

உயர்நீதிமன்றம் அனுமதி:

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 14க்கு ஒத்திவைத்து பல்வேறு நிபந்தனைகளை நீதிபதிகள் விதித்துள்ளனர். அவற்றின் விபரம்,

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்வு – தமிழக அரசு உத்தரவு..!

டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு – தமிழக அரசு அறிவிப்பு..!

  • டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோருக்கு பெயர், முகவரி மற்றும் ஆதார் எண்ணுடன் ரசீது தரப்பட வேண்டும்.
  • மூன்று நாளைக்கு ஒருமுறை ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும்.
  • மதுபான விற்பனையை நீதிமன்றம் கவனிக்கும் எனவும், விதிமுறைகளை மீறினால் கடைகள் பூட்டப்படும்.
  • டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். நேரடி பண பரிவர்த்தனை மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.
  • ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் ஒருவர் 2 மதுபாட்டில்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here