நாட்டில் சட்டென குறைந்த தங்கத்தின் விலை – கடைகளுக்கு படையெடுத்த நகை பிரியர்கள்!!

0
நாட்டில் சட்டென குறைந்த தங்கத்தின் விலை - கடைகளுக்கு படையெடுத்த நகை பிரியர்கள்!!

நாட்டில் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து, தங்கத்தின் விலை திடீரென உயர்வதும், அதிரடியாய் குறைந்தும் வருகிறது. இந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை:

தென் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகமான நகைப்பிரியர்கள் உள்ளனர். மேலும் பண்டிகைக் காலம் தொடங்கி விட்டால் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நகைப்பிரியர்கள் இப்போதிலிருந்து நகை வாங்க தொடங்கி விட்டனர். இந்நிலையில் ஆபரணத் தங்க விலையின் இந்த மாத தொடக்கத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் கடந்த வாரம், தங்க விலை அதிரடியாக குறைந்தது. அந்த சமயத்தில், நகைக்கடைகளில் அதிகமாக நகை விற்பனை இருந்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து தங்க விலை திடீரென உயர்ந்தது. என்னதான் தங்கத்தின் விலை பல மடங்காக உயர்ந்து கொண்டே சென்றாலும் நகைப்பிரியர்கள் தங்களது பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர்.

நாட்டில் 300 ஊழியர்கள் திடீர் பணி நீக்கம் – பிரபல தனியார் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!!

இந்நிலையில் நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சரிவை சந்தித்து உள்ளது. அதாவது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,120க்கு விற்பனை ஆகிறது. மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,640க்கு விற்பனை ஆகிறது. தொடர்ந்து தங்கத்திற்கு இணையாக விரும்பப்படும் வெள்ளியின் விலை( ஒரு கிராம் ) 20 காசுகள் உயர்ந்து ரூ.62.40க்கு விற்பனை ஆகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here