இந்திய வீரர்கள் பிட்னஸ் சரியில்லை.., பாக் வீரர் அட்வைஸ்.., கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

0
இந்திய வீரர்கள் பிட்னஸ் சரியில்லை.., பாக் வீரர் அட்வைஸ்.., கொந்தளிக்கும் ரசிகர்கள்!!
இந்திய வீரர்கள் பிட்னஸ் சரியில்லை.., பாக் வீரர் அட்வைஸ்.., கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

T20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான சில முக்கிய காரணங்களை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது T20 போட்டி நாளை நாக்பூரில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் சில கருத்துக்களை முன் வைத்துள்ளார். அவர் இந்திய அணியில் ஃபீல்டர்கள் சரியில்லை என கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் முதல் போட்டியில் கே.எல்.ராகுல், அக்‌ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல் ஆகிய மூன்று பேரும் தங்களுக்கு கிடைத்த சுலபமான கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டனர். இதனால் இது போன்ற தவறுகளை அடுத்த போட்டியில் சரி செய்தால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெறும் என சல்மான் பட் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் இந்திய வீரர்கள் யாரிடமும் சரியான பிட்னஸ் இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

என்ன என்ன பீலிங்கு., தோனியை மிஸ் பண்ணும் ரவி சாஸ்திரி.., உங்களுக்குள்ள அப்படி என்ன கனெக்சன்!!

அதாவது இந்திய வீரர்களில் ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி மட்டும் தான் சரியான பிட்னஸில் உள்ளனர். ஆனால் ரோகித் சர்மா, ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் சரியான பிட்னஸில் இல்லாமல் அதிக உடல் எடையுடன் இருப்பதாக சல்மான் பட் விமர்சித்துள்ளார். இதனால் இது போன்று தவறுகளை BCCI சரி செய்தால் மட்டுமே இந்திய அணி இனி வரும் போட்டிகளில் வெற்றி பெறும் என அட்வைஸ் சொல்லியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here