சீரியல் மாற்றுயம் சினிமாவில் நடித்து ரசிகர்களின் மனதை வென்ற வித்யா பிரதீப் அவர்கள் ஹாலிவுட் நடிகை ‘மர்லின் மன்றோ’ போன்று உடையணிந்து புகைப்படம் எடுத்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வித்யா பிரதீப்:
அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்த வித்யா பிரதீப் தற்போது மாடலாக முன்னணி நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சைவம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கி இருந்தார். அதன் பின்னர் பசங்க – 2, ‘ஒண்ணுமே புரியல’, ‘அச்சமின்றி’ என பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது சினிமா வாய்ப்பு குறைந்ததால் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாயகி’ சீரியலில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது பல திரைப்படங்களை கையில் வைத்துள்ளார்.
இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது வித்யாசமான கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் ஹாலிவுட் நடிகை ‘மர்லின் மன்றோ’ போன்று உடையணிந்து புகைப்படம் எடுத்துள்ளார். இது அவரது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.