பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து தொடர்ந்து பல போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். தற்போது படவாய்ப்புக்காக வேற லெவெலில் இறங்கி வேலை பார்த்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ரம்யா பாண்டியன்
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரம்யா. ஜோக்கர் படத்தில் நடித்திருந்தாலும் அந்த ரம்யா பாண்டியனை யாருக்குமே தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு ஆண் தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனாலும் அவருக்கு கைகொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். தனது பொறுமையால் தான் மக்கள் மனதை வெகுவாக கொள்ளைக்கொண்டார். இவருக்கு கோவமே வராதா?? என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். கோமாளிகள் எவ்வளவு சேட்டைகள் செய்தாலும் அதனை அனுசரித்து பொறுமையாகவே இருந்தார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போது அவர் எடுத்து கொண்ட மொட்டைமாடி போட்டோஷூட் வேற லெவெலில் வைரலானது. இவர்களின் பிரபலம் எந்த அளவிற்கு இருந்தது என்றால் எந்த சேனலை திறந்தாலும் அதும் குக் வித் கோமாளி தான்.
குக் வித் கோமாளி அஸ்வின் ‘ஆபீஸ்’ சீரியல் நடித்தவரா?? அதுவும் இந்த நடிகையுடனா??
பட்டிதொட்டியெல்லாம் இவர்களின் புகழ் பறந்தது. இதன் மூலம் தான் ரம்யா பாண்டியனுக்கு பிக் பாஸ் வாய்ப்பும் கிடைத்தது. பிக் பாஸ் வீட்டின் சிங்கப்பெண் என்றே பெயர் வாங்கினார். வீட்டை விட்டு வெளியே வந்தபோது இவரை ஆரவாரத்துடனேயே அழைத்து சென்றனர்.
தற்போது முழு வீச்சாக படவாய்ப்புகளுக்காக அடிப்போட்டு வருகிறார் ரம்யா பாண்டியன். பல போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் இதுவரையிலும் இல்லாத விதமாக போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆல் அவுட் என்று தான் சொல்ல வேண்டும். போற போக்கை பார்த்தல் படவாய்ப்பை எட்டி பிடித்து விடுவார் போல இருக்கே.