அச்சு அசலாக ராஜமாதா போலவே மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா தற்போது புதுவிதமான ஹேர் ஸ்டைலில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் அவரை ராஜமாதா என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் தம்பிகள் கதையை மையப்படுத்தி கொண்டு வந்ததால் இந்த சீரியலுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம். மேலும் திருமணத்திற்கு பிறகும் இந்த குடும்பம் எப்படி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் என்றும் காட்டப்பட்டுள்ளது.

இதனால் தான் மக்களும் விரும்பி பார்க்கின்றனர். ஏனெனில் இப்படியும் நம் குடும்பம் ஒற்றுமையுடன் இருக்காதா?? என்று ஏங்குபவர்களும் பலர் உள்ளனர். அப்படி பட்ட சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அதிலும் முல்லை கதிர் ரொமான்ஸ் சீனுக்காகவும் மக்கள் இதனை விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் பிடிக்காமல் திருமணம் செய்துக்கொண்ட இருவர் எப்படி இவ்வளவு சந்தோசமாக வாழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த முல்லை கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமானது. சித்ரா இறந்ததற்கு பிறகு தைரியமாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் தான் காவியா.

ஆரம்பத்தில் பல எதிர்ப்புகள் இருந்தாலும் நாளடைவில் இவருக்கு ஆதரவுகள் அதிகரிக்க ஆரம்பித்தது. தற்போது பல போட்டோஷூட் நடந்தி புகைப்படத்தை வெளியிட ஆரம்பித்து விட்டார் காவியா.

குக் வித் கோமாளி அஸ்வின் ‘ஆபீஸ்’ சீரியல் நடித்தவரா?? அதுவும் இந்த நடிகையுடனா??

சில நாட்களுக்கு முன்பு சித்ராவை போலவே இவர் வெளியிட்டிருந்த புகைப்படம் ஒன்று வைரலானது. அந்த வகையில் தற்போது ராஜா மாதா போலவே அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here