குக் வித் கோமாளி அஸ்வின் ‘ஆபீஸ்’ சீரியல் நடித்தவரா?? அதுவும் இந்த நடிகையுடனா??

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அஸ்வின் விஜய் டிவியில் சக்கை போடு போட்ட பிரபல சீரியல் ஒன்றில் நடித்துள்ளார். இதனை கேட்ட அவரது ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

குக் வித் கோமாளி அஸ்வின்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. 2 சீசன்களும் சக்கை போடு போட்டது. அதிலும் முக்கியமாக கோமாளிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சில குக்குகளும் நல்ல பிரபலமடைந்தனர். அதாவது ரம்யா பாண்டியன், வனிதா மற்றும் உமா ரியாஸ், தீபா அக்கா, அஸ்வின் என பலரும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிலும் முக்கியமாக அஸ்வின் தான். மக்களின் கனவு நாயகனாக இருந்து வருகிறார். அவர் பல ஆல்பம் சாங், ஷார்ட் பிலிம் என பலவற்றில் நடித்தும் அவருக்கு புகழ் கிடைத்தது என்னவோ குக் வித் கோமாளி தான். ஆனாலும் அஸ்வின் பற்றி தெரியாத பல விஷயங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டு உள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலவச ரேஷன் , ஆட்டோ , ரிக்க்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு 5,000 ரூபாய் – மாநில அரசு அறிவிப்பு

அதாவது அஸ்வின் விஜய் டிவியில் ரெட்டை வால் குருவி, நினைக்க தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்திருந்தார் என்பது நமக்கு தெரியும். ஆனால் அவர் அதையும் தாண்டி விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ என்ற சீரியலில் நடித்துள்ளாராம். அதுவும் ஈரமான ரோஜாவே சீரியலின் நாயகியான பவித்ராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here