அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலவச ரேஷன் , ஆட்டோ , ரிக்க்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு 5,000 ரூபாய் – மாநில அரசு அறிவிப்பு

0

அடுத்த இரண்டு மாதங்களுக்கு 72 லட்சம் பேருக்கு இலவச ரேஷன் – மாநில அரசு அறிவிப்பு

கோவிட் -19 வழக்குகள் நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் , அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேசிய தலைநகரில் உள்ள அனைத்து 72 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் வழங்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இது குறித்து கூறுகையில் “72 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும், அதற்காக 2 மாதங்கள் முழுவதும் லாக் டவுன் தொடரும் என்று அர்த்தம் இல்லை, தற்போதுள்ள சூழலில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவே நிதி நெருக்கடியின் போது அவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் டெல்லியில் உள்ள அனைத்து ஆட்டோ , ரிக்க்ஷா ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கப்படும் என தில்லி அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here