‘சிவா, என் செருப்ப கொஞ்சம் எடுத்துட்டு போக முடியுமா’ – சேதுவின் செயலால் அதிர்ச்சியடையும் குடும்பத்தினர்!!

0

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று சேது சிவாவின் வீட்டிற்கு வந்து அனைவரையும் அவமானபடுத்துகிறார். இதனால் சிவா மற்றும் சஹானா இருவரும் மிகவும் கவலை அடைந்து விடுகின்றனர்.

“இதயத்தை திருடாதே” சீரியல்

இன்று “இதயத்தை திருடாதே” சீரியலில் ஐஸ்வர்யா மற்றும் சேது இருவரும் ஒன்றாக சேர்த்து விருந்திற்கு என்று சிவா வீட்டிற்கு வருகின்றனர். இதனால் மகிழ்ச்சி அடையும் சிவா பட்டாசு வெடித்து ஆர்ப்பாட்டமாக தனது தங்கையை வரவேற்கிறார். இதனால் கடுப்பாகும் சேது அனைவர் முன்பும் ஐஸ்வர்யாவை வேலை வாங்கி அவமானம் செய்கிறார். பின், சஹானா இருவருக்கும் ஆரத்தி எடுக்கும் போது சேது கோபமாக நிற்கிறார். அதே போல் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து நிற்கவும் மறுக்கிறார்.

‘உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?? தின்னுட்டு தூங்க தான் லாயக்கு’ – சிவகாமியை கண்டபடி கிழிக்கும் மாமியார்!!

இதனால் சஹானாவிற்கு என்னவோ போல் ஆகி விடுகிறது. இதனால் அவர் தனது மாமியார் பவானியை ஆரத்தி எடுக்க சொல்லி விட்டு சென்று விடுகிறார். தொடர்ச்சியாக சேது செய்வதனை பார்த்து கவலை அடையும் சிவா வீட்டின் வெளியவே நின்று விடுகிறார். பின், சேது வீட்டிற்குள் வரும் தான் செருப்பு அணிந்து விட்டு வந்ததாகவும், அதனை கழட்டி விட்டு சிவாவை எடுத்து வெளியே வைக்க சொல்கிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்து விடுகிறது.

இதனை அடுத்து சிவாவும் செருப்பினை எடுத்து வைக்கிறார். பின், சேது மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் பாலும் பழமும் கொடுக்கும் சம்பரதாயத்தினை செய்கின்றனர். பின், சேது அனைவரிடமும் நன்றாக பேசுகிறார். பின், சேது மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சாப்பிட அமர்கின்றனர். சேது அனைவரையும் சாப்பிட சொல்கிறார். தாங்கள் பிறகு சாப்பிட்டு கொள்வதாக அனைவரும் சொல்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், சேது ஐஸ்வர்யாவிற்கு அனைவரும் ஊட்டி விட வேண்டும் என்று சொல்கிறார். பின், அனைவரும் ஊட்டி விடுகின்றனர். ஐஸ்வர்யாவை கவனித்து விட்டு தன்னை அனைவரும் கை விட்டு விட்டனர் என்றும் கூறுகிறார். சேது நல்லவனா? இல்லை கெட்டவனா? என்று அனைவரும் குழம்பி போய் விடுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசொட் முடிந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here