‘எந்த காரணத்தை கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது’ – தமிழக அரசு அதிரடி!!

0

நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அந்த நிறுவனம் மனு வழங்கியது. தற்போது இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலை

நாட்டில் கொரோனா நோய் பரவல் மிக அதிகமான தாக்கத்தை கடந்த மாதம் முதல் ஏற்படடுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவத்திற்காக வழங்கப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் பல கொரோனா நோயாளிகள் தங்களது உயிரை இழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் அதிகமாக ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்றும் எனவே அதனை திறக்க அனுமதி வேண்டும் என்றும் அந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு வழங்கியது. மேலும் இதனை திறக்க அனுமதிக்கலாம் என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியது. ஆனால் இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தற்போது மீண்டும் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது.

அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் கூறியதாவது, எக்காரணத்தை கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது. அது மிக கடுமையான சுற்றுசூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும். மேலும் விதிமுறைகளை மீறியுள்ளதால் தமிழக அரசு இதனை மூடியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மக்களிடன் இன்று காலை கருத்துக்களை கேட்டு வந்தார். அதில் பெரும்பாலானோர் இதனை திறக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்

கொரோனா மையங்களாக மாறும் கல்லூரி, தொழில் நிறுவனங்கள் – தமிழக அரசு அதிரடி!!

மக்களின் கருத்து மிக முக்கியமானவை என்பதால் இதன் முடிவுகளை ஒன்று திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும் உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தலாம் என்று கூறியது. அதற்கும் தமிழக அரசு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பதில் நாட்டின் வேறு இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here