தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது முதன் முறையாக தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின்
அரசியல் ஜாம்பவானாக ஒரு காலத்தில் இருந்து வந்த கலைஞர் கருணாநிதியின் பேரன் தான், உதயநிதி ஸ்டாலின். இவர் “ரெட் ஜெயண்ட் மோவிஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரது தயாரிப்பில் பல வெற்றி திரைப்படங்கள் வெளி வந்தது. இப்படியாக இருக்க, இவரது மனைவி கிருத்திகா மிர்ச்சி சிவாவை வைத்து ஒரு திரைப்படத்தினை இயக்கவும் செய்தார்.
ராஜா ராணி 2 – நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த அர்ச்சனா! சந்தியாவின் நிலை என்ன?
இப்படியாக இருக்க, இவர் முதன் முதலாக “ஒரு கல் ஒரு கண்ணாடி” என்ற திரைப்படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே நன்றாக நடித்ததால் இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதே போல் இவர் தனது தந்தை ஸ்டாலினுக்கு துணையாக இந்த முறை தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். அப்போது இவர் பல சர்ச்சைகளில் சிக்கினார் என்பது வேறு கதை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இன்று வரை உதயநிதி ஸ்டாலின் தனது மகன் குறித்த விவரத்தினை யாருக்கும் தெரிவித்ததில்லை. முதன் முறையாக இன்று தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தினை இவர் வெளியிட்டுள்ளார். தந்தை மற்றும் மகன் இருவரும் ஒன்றாக இருக்கும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.