தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

0

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

இன்று(ஏப்ரல் 22) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 23.04.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 24.04.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்ட முதல்வர் – மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!!

ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 25.04.2021 மற்றும் 26.04.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

உதயநிதி ஸ்டாலின் மகனா இது?? அப்படியே தாத்தாவை உரிச்சு வச்சு இருக்காரு பாருங்களே! வைரலாகும் புகைப்படம்!!

அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சிவலோகம் 4, சித்தார் 3, கோவில்பட்டி 2, குழித்துறை 1 செமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here