தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் நடிகர் விவேக்கிற்கு தற்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நகைச்சுவை நடிகர் விவேக்
தமிழ் சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் குடியேறியவர் தான் நடிகர் விவேக். இவரது நகைச்சுவைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். மேலும் தனது நடிப்பிற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். சினிமாவில் இவர் நகைச்சுவை நடிகராக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ஹீரோ தான்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
காரணம் இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம் அவர்களை பின்பற்றி இவர் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார். இதனால் பல இளைஞர்கள் கண்ணிற்கு இவர் தற்போது ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா நோய்த்தொற்று – தலைமை செயலாளர் அவசர ஆலோசனை!!
தற்போது இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் தற்போது வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் விவேக்கை அனுமதித்துள்ளனர். தற்போது அவரது உடல் நிலையை மருத்துவர்கள் மிக தீவிரமாக கவனித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.