முகேன் ராவின் “வேலன்” திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் – இணையத்தில் வைரல்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் முகேனின் “வேலன்” திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் பிரபலம்

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் அனைவரும் சின்னத்திரை அல்லது டிவி ரியாலிட்டி ஷோக்களின் மூலமாக தான் வருகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 3” நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான், நடிகர் முகேன் ராவ். இவர் யூடியூபில் ஆல்பம் சாங் வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

என்னது 100வது வெற்றியா?? வேற லெவல் போங்க! கொல்கத்தா அணியை பாராட்டி ஷாருகான் ட்வீட்!!

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து அனைவருக்கும் கடுமையான போட்டியாக இருந்து வந்தார். அந்த போட்டியில் இவர் அதீதமான கோபத்தினை வெளிப்படுத்தினாலும், அவரது நல்ல குணத்தின் காரணமாக தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தினை உருவாக்கி கொண்டார். இப்படியாக இருக்க, இவர் புதுமுக இயக்குனர் சிவா என்பவரின் இயக்கத்தில் “வேலன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கூடுதலாக, நகைச்சுவை நடிகர் சூரி இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இந்த திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது அந்த திரைப்படத்தின் படக்குழுவினர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. “வேலன்” திரைப்படத்தில் முகேன் ஒரு கல்லூரி மாணவராக நடித்துள்ளராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here