என்னது 100வது வெற்றியா?? வேற லெவல் போங்க! கொல்கத்தா அணியை பாராட்டி ஷாருகான் ட்வீட்!!

0

நேற்று நடத்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி ஐதராபாத் அணியை வீழ்த்தி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி தனது 100வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. தற்போது இதற்கு பாலிவுட் நட்சத்திரம் ஷாருகான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

100 வது வெற்றி:

இந்தியாவில் தற்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைஸஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் ராணா மற்றும் திரிபாதி ஆகிய இருவரின் பேட்டிங் பிரமிப்பாக இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர்கள் அரைசதம் அடித்ததே கொல்கத்தா அணியின் ஸ்கோர் உயர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அதேபோல் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா முக்கிய நேரத்தில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றியை பதிவு செய்தது மூலம் ஐபிஎல் போட்டியில் தனது 100வது வெற்றியை பதிவு செய்த மூன்றாவது அணி என்ற பெருமையை பெற்றது. இதுவரை ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் மட்டுமே 100 வெற்றிகளை கடந்துள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் இன்று பலப்பரீட்சை – வெற்றி யாருக்கு??

அதில் முதல் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி (120 வெற்றி), இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (106 வெற்றி) தற்போது இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி( 100 வெற்றி) இந்த பட்டியலில் மூன்றாவது அணியாக இடம்பிடித்துள்ளது. தற்போது இதற்கு அந்த அணியின் இணை உரிமையாளரான ஷாருக்கான் கொல்கத்தா அணி வீரர்களை பாராட்டும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்து மழையை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here